Home » , , , » சிக்கன் மக்லூபா - Chicken Maqlooba - Chicken Rice

சிக்கன் மக்லூபா - Chicken Maqlooba - Chicken Rice

images
சிக்கன் கப்ஸா, சிக்கன் மந்தி ரைஸ்  போன்ற அரபுச் சாப்பாடு அமீரகத்தில் பொதுவாக பிரசித்தம். ஆனால் இந்த சிக்கன் மக்லூபா பெயரை சென்ற மாதம் தான் வாரேவா டாட் காமில் ஒரு வீடியோ ரெசிப்பி பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டேன். கொஞ்சம் நம்ம ஊர் ஸ்டைலில் செஃப் சஞ்சய் தும்மா இந்த சிக்கன் மக்லூபாவை செய்து காட்டியிருந்தார். எனவே நானும் செய்து அசத்தியாச்சு.
தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி – 500 கிராம்
சிக்கன் – 8  பெரிய துண்டுகள் ( 800 கிராம்)
சிக்கன் ஊற வைக்க:
இஞ்சி பூண்டு – 2 டீஸ்பூன்
சில்லி பவுடர் – 1 -2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
லெமன் ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
( இப்படி தனித் தனியாக  மசாலா சேர்க்காமல் சிக்கன் டிக்கா அல்லது சிக்கன் பார்பிகியூ அல்லது சிக்கன் 65 மசாலா கூட காரத்திற்கு தக்க சேர்த்து சிக்கனை ஊற வைக்கலாம் – மசாலா அவரவர் விருப்பம் தான் )
பெரிய கத்திரிக்காய் – 1
உருளைக்கிழங்கு – 1
காளிப்ளவர் துண்டுகள் – 1 கப்
காய்கறிகளை பொரிக்க தேவையான அளவு எண்ணெய்.
சிக்கன் ஸ்டாக் – 4 கப் (ஒரு பங்கு அரிசி என்றால் 2 பங்கு சிக்கன் ஸ்டாக்)
ஆலிவ் ஆயில் அல்லது சன்ஃப்ளவர் ஆயில் – 2+ 3  டேபிள்ஸ்பூன்
உப்பு,மிளகுத்தூள் – தேவைக்கு.
செய்முறை:
சிக்கன் துண்டுகளை நன்கு அலசி சுத்தமாக தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.மேற்சொன்ன ஊற வைக்கும் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு நாள் முழுவதும் ஃப்ரிட்ஜில் ஊற வைத்தால் சூப்பர் சாஃப்ட், டேஸ்டாக இருக்கும். முடியாவிடில் 2- 4 மணி நேரம் கூட ஊறவைக்கலாம். அரிசியை களைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்தால் சாதம் நல்ல நீளமாக பார்க்க அழகாக இருக்கும்.
உருளைக்கிழங்கு தோல் சீவி வட்டமாக கட் செய்து கொள்ளவும். கத்திரிக்காயையும் வட்டமாக நறுக்கி வைக்கவும். காளிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்து நன்கு அலசி வைக்கவும்.தேவைக்கு உப்பு மிளகு தூவி சிறிது நேரம் வைத்தால் அதில் உள்ள தண்ணீர் வெளி வரும்.வடித்து விட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் விடவும். சூடானவுடன் ஊற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
சிக்கனை பிரட்டி விட்டு பொரித்த உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், காளிஃப்ளவரை சிக்கன் மீது வைக்கவும்.அதன் மேல் ஊறிய அரிசியை போடவும். அந்த நேரத்தில் சிக்கன் ஸ்டாக் நன்றாக கொதிக்க விடவும்.
கொதி கொதிக்கும் சிக்கன் ஸ்டாக்கை ( அரிசி ஒரு அளவு என்றால் சிக்கன் ஸ்டாக் 2 அளவு) பாத்திரத்தில் அரிசி மேல் விடவும்.
மெதுவாக சிக்கனில் உள்ள மசாலா கொதித்து மேல் வரும் .
அரிசி வெந்து மேலே வரும் பொழுது தவாவை அடுப்பின் மீது வைத்து அதன் மேல் சிக்கன் ரைஸ் செய்யும் பாத்திரத்தை வைத்து மிகச் சிறிய தீயில் 20 – 30 நிமிடம் மூடி ஆவி வெளியேறாதபடி வைக்கவும். 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால்  ரைஸ் பிச்சிப்பூ மாதிரி வெந்து உதிரியாக சூப்பராக இருக்கும்.
அப்படியே பாத்திரத்தை ஒரு பெரிய தட்டில் வைத்து சிக்கன் மேலே இருக்குமாறும் சாதம் கீழே இருக்குமாறும் மெதுவாக திருப்பி வைக்கவும்.
பாத்திரத்தில் உள்ள சிக்கன் ரைஸ் அனைத்தும் அந்த பெரிய தட்டில் வருமாறு திருப்பி தட்டி விட்டு மொத்தமாக வைத்து பரிமாற வேண்டும்.சிக்கன் அடுத்து காய்கறிகள் ரைஸ் என்று அடுக்காக இருக்கும். இந்த ரைஸ்க்கு பெயரே அப் சைட் டவுன் ரைஸ்  தான்
Share this video :

0 comments :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2013. Tamil Tips and Tricks - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger